மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் தமக்கெதிரான ஆவணங்களைக் கோரி தொடர்பை ஏற்படுத்தியிருப்பதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இன்டர்போல் ஊடாக தொடர்பில் வந்த அர்ஜுன் மகேந்திரன் தமக்கெதிரான பிடியாணை மற்றும் அது தொடர்பான ஆவணங்களைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவன நிறைவேற்று அதிகாரி பாலிசேன ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment