எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்ந்தோர் அரசின் பங்காளிகளாக இருப்பதோடு அமைச்சுப் பதவிகளையும் வகித்து வரும் நிலையில் அதே கட்சிக்கு எதிர்க்கட்சி வழங்கப்பட முடியாது எனவும் இது தொடர்பில் சபாநாயகர் தெளிவான முடிவை எடுத்திருப்பதாகவும் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் குறி வைத்து கூட்டு எதிர்க்கட்சி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment