அமெரிக்காவில் மாநில , உள்ளூர் நிர்வாக சபைகள் , நிர்வாக அலகுகளுக்கான தேர்தல் இம் மாதம் ஓகஸ்ட் 07 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வருகின்றது இந்த தேர்தல்கள் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் வேறுபட்ட நாட்களில் சுமார் ஒரு மாத காலத்துக்கு இடம்பெறவுள்ளது ,இம்முறை இடம்பெறும் தேர்தல்களில் அமெரிக்க முஸ்லிம்களின் பங்கு பற்றல் சடுதியாக அதிகரித்துள்ளதை காட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது தற்போது இடம்பெரும் தேர்தல்களில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளூர் நிர்வாக சபைகள் மற்றும் நிர்வாக அலகுகளுக்கான போட்டியிடுகின்றார் இவற்றுள் ஆளுநர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலும் அடங்கும், இந்த தேர்தலை முஸ்லிம்கள் அமெரிக்காவில் ,இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மிக மோசமாக அதிகரித்துவரும் வெறுப்பூட்டும் அமைப்புக்கள்( Hate group ) மற்றும் அவற்றின் நடவடிக்கைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஒரு சிறந்த ஆயுதமாக பயன்படுத்த முயல்பவாத கூற முடியும்.
இதேவேளை அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிகையிலான வெள்ளைமேலாதிக்கவாத தீவிர வலது சாரி அமைப்புக்கள் தோன்றியுள்ளது இந்த அமைப்புக்களில் இலச்சக்கணக்கான வெள்ளை அமெரிக்கர்கள் அங்கத்துவம்பெற்றுள்ளதாக அந்த அமைப்புகளே கூறிவருகின்றன , அமெரிக்காவில் செயல்பட்டுவரும் இனவாத அமைப்புக்கள் தொடர்பில் ஆய்வு செய்துவரும் அமெரிக்க அமைப்பான Southern poverty law center என்ற அமைப்பு அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பல்வேறு Hate group களின் எண்ணிக்கை 954 தாண்டியுள்ளதாக கூறுகின்றது
டொனால்ட் டிரம் தொடர்ந்தும் வெள்ளைமேலாதிக்க சிந்தனைகொண்ட இஸ்லாமிய விரோத அமைப்புக்களுக்கு தனது ஆதரவையும், அவை செயல்படுவதத்திற்கான வெளியையும் வழங்கி அவற்றை ஊக்கிவிப்பதாக அமெரிக்க முஸ்லிம்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்த அமைப்புக்களின் தொடரான தீவிர செயல்பாடுகளின் பின்னரான அமெரிக்க உள்ளூர் ஊடங்களின் செயல்பாட்டிலும் மாறுதல்கள் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் , இஸ்லாத்தின் பெயரால் அமெரிக்காவில் நடாத்தப்படும் தாக்குதல்களை முன்னர் அமெரிக்க ஊடகங்கள் இஸ்லாம் வேறு இந்த தாக்குதல்கள் அதன் பெயரால் நடாத்தப்படுபவை என வேறுபிரித்து காட்டமுயன்றதாகவும் ஆனால் இப்போது அந்த ஊடகங்கள் முழுமையாக இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் இஸ்லாத்துக்கு எதிரான அமெரிக்க மக்களை திருப்பும் இஸ்லாமியோபோபியாவை ( இஸ்லாம் தொடர்பான அச்சத்தை ) அமெரிக்கர்களின் உள்ளங்களில் விதைப்பதத்திற்கு மல்டி பில்லியன் டாலர்களை செலவு செய்துவருவதாகவும் அமெரிக்க முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதேவேளை உருவாகியுள்ள வெள்ளை மேலாதிக்கவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கருத்துக்களை பகிரங்கமாக போதித்துவருகின்றன என்பதுடன் இந்த அமைப்புக்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகாரிகள் அரசியல்வாதிகள் நெருக்கமான உறவை கொண்டுள்ளனர் எனவும் அரசியல் விமர்சனத்தளத்தில் கருத்துரைக்கப்படுகிறது , அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக சர்ச்சைக்குரிய வெள்ளை மேலாதிக்க டொனால்ட் டிரம்ட் ”மீண்டும் அமெரிக்காவை மகத்தான நாடாக்குவோம்” (“Make America Great Again” ) என்ற கோஷத்துடன் தனது பிரசாரங்களில் முஸ்லிம்களுக்கும் ,இஸ்லாத்துக்கும் எதிரானவராக தன்னை அடையாளப்படுத்தி இருந்தார் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாவாதத்திற்கு முன்னரும் பின்னரும் வெள்ளைமேலாதிக்க தீவிர வலது சாரி அமைப்புக்களை ஊக்குவித்து , போசித்துவருகிறார் என்பது வெளிப்படையானது இப்போது இந்த வெள்ளை மேலாதிக்க ஜனாதிபதியின் நிர்வாகத்தில் வெள்ளை மேலாதிக்க அமைப்புக்கள் கூட்டாக இலக்குகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவதாகவும் ''இஸ்லாம் பற்றிய அச்சத்தை'' அமெரிக்கர்களின் உள்ளங்களில் விதைக்கும் தொழிச்சாலையாக மாறியுள்ளதாகவும் ஆய்வரிக்கைகள் கூறுகின்றன இவ் அமைப்புகளின் பெரிய அமைப்பாக ACT for America என்ற அமைப்பு அடையாளப்படுத்தப்படுகின்றது, இந்த அமைப்பு பிர்ஜிட் கேப்ரைல் என்ற வெள்ளை மேலாதிக்கவாத பெண்ணின் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு , தாம் அமெரிக்க தேசத்தை பாதுகாக்க அவதாரம் எடுத்துள்ளவர்கள் என கூறுகிறது, தம்மிடம் சுமார் ஏழு இலச்சத்தி ஐம்பதாயிரம் (750000) உறுப்பினர்கள் இருப்பதாக கூறும் இந்த அமைப்பு இது இஸ்லாமியோபோபியாவை அமெரிக்கர்களின் உள்ளங்களில் விதைக்கும் முக்கிய அமைப்பாகவும் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் தொழிற்படும் பல்வேறு அமைப்புகளுடனுன் இணைத்தும் , கலந்தும் செயல்பட்டுவரும் செல்வாக்குள்ள முன்னணி அமைப்பு என southern poverty law center குறிப்பிடுகின்றது , இந்த அமைப்பின் தாக்கத்தினால் அமெரிக்க முழுவதும் இஸ்லாம் பற்றிய அச்சம் உயிர்த்துடிப்புடன் வைக்கப்பட்டுள்ளது என அமெரிக்க அரசியல் எழுத்தாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
”இஸ்லாமியோபோபியா அதிபர்” டொனால்ட் டிரம்ட் ஜனாதிபதியானதிற்கு பின்னர் அமெரிக்க சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் உயர்வடைந்ததன அமெரிக்காவில் சிறுபான்மையினரான ஆபிரிக்க அமெரிக்கர்கள் ,லத்தீன் அமெரிக்கர்கள் ,மற்றும் ஹிஸ்பானியர்கள் ,முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை சமூகத்தினர் அச்சத்துடன் காலத்தை கடத்தும் நிலையை அவர் அமெரிக்காவில் உருவாக்கிவிட்டுள்ளார் என்பதுடன் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் அமெரிக்காவில் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகின்றது .
அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் வெள்ளைமேலாதிக்க தீவிர வலது சாரி அமைப்புக்களின் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றது அங்கு முஸ்லிமக்ளுக்கும் ,இஸ்லாத்துக்கும் எதிரான கோஷங்கள் எழுப்படுகின்றது அங்கு முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அண்மையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 22 பெரிய நகரங்களில் இஸ்லாமிய ஷரீயாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ACT for America அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு அவற்றில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
இந்த வெறுப்பு அமைப்புக்களுக்கு பெருந்தொகையான நிதி நன்கொடையாக வழங்கப்படுகின்றது இவற்றுக்கு வழங்கப்படும் நீதியின் 80 சதவீதமானதை இஸ்ரேலை ஆதரிக்கும் அமைப்புகள் வழங்கியுள்ளது என அல் ஜஸீரா புலனாய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது , அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பல்வேறு இனவாத அமைப்புக்களின் எண்ணிக்கை 954 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளதாக அறிந்தோம் அவற்றுள் முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் வெறுக்கும் அமைப்புக்கள் மட்டுமல்லாது யூதர்களை வெறுக்கும் Neo-Nazi அமைப்புக்களும் உள்ளடங்கும் என southern poverty law center குறிப்பிடுகின்றது.இதேவேளை அமெரிக்காவில் முஸ்லிம்களின் குடியியல் அதிகரிப்பை இஸ்ரேலும் , சயோனிஸமும் யூதரக்ளின் உலகளாவிய இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாக பார்க்கின்றது ஆகவே அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய வெறுப்பு குழுக்களுக்கு யூத அமைப்புக்களும் , யூத , இஸ்ரேல் ஆதரவு அழுத்த குழுக்களும் நிதியுதவி வழங்கி இஸ்லாமோபோபியாவை ஊக்கிவிக்கின்றன என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
பொதுவாக ஐரோப்பாவிலும் ,அமெரிக்காவிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து சொல்கின்றமை சயோனிஸ சக்திகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்றப்படுத்தியுள்ளது, Pew Research Center என்ற முக்கிய அமெரிக்க ஆய்வுமையம் இந்த ஆண்டு (2018) வெளியிட்டுள்ளன அறிக்கை ஒன்றில் அமெரிக்காவில் சுமார் 3.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாகவும் அவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து செல்வதாகவும் தெரிவித்திருந்தது மேலும் அந்த ஆய்வு மையம் குறிப்பிடும் தகவலில் 2040 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்கள் அமெரிக்க யூதர்களின் எண்ணிக்கையை பின்தள்ளி அமெரிக்காவின் இரண்டாவது பெரும்பான்மையாக மாறிவிடுவார்கள் என்ற தகவலையும் தெரிவித்திருந்தது , இது யூதர்கள் அமெரிக்காவில் அரசியல் ரீதியில் செல்வாக்கு செலுத்திவரும் நிலைக்கு பெரும் சவாலாக மாறும் என்ற தகவலையும் சொல்லியுள்ளது.
இதுபோன்ற பல்வேறு ஆய்வுத் தகவல்கள் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் வெள்ளைமேலாதிக்கவாத அமைப்புக்களையும் , சயோனிச சக்திகளையும் கூட்டாகவும் , விரைவாகவும் தொழிற்பட வைத்துள்ளது என்று கூறலாம் தற்போது அமெரிக்க தேர்தலில் போட்டியிட்டுவரும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராக செய்யப்படும் தீவிர பிரசாரங்களில் கடுமை இதை தெளிவாக காட்டுவதாக உள்ளது , அமெரிக்க தேர்தல் களத்தில் குதித்துள்ள சுமார் 100 வரையான முஸ்லிம் வேட்பாளர்கள் கடுமையான இனவாத நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றார்கள் ஆனால் அவர்கள் பன்மடங்கு உற்சாகத்துடன் இயங்கிவருவதாக CAIR என்ற இஸ்லாமிய அமைப்பு குறிப்பிடுவதுடன் முஸ்லிமகளை தேர்தலில் வாக்களிக்குமாறு ஊக்கி விப்பதுடன் வேட்பாளர்களை பயிற்றுவிப்பதிலும் ஊக்கிவிப் பதிலும் முன்னின்றி செயல்பட்டுவருகின்றது
அமெரிக்க உளவு பிரிவான FBI தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கு போது அமெரிக்காவில் பிரதான, பெரும்பாலான முஸ்லிம்கள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனுதாபிகளாக இருகின்றார்கள் -main stream” American Muslims are likely to be terrorist sympathizers- இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் “violent” . போன்ற மிகவும் மோசமான முறையிலான பயிற்சி வழங்கும் முறை முன்னர் அம்பலமாகி இருந்தது அதில் அல்லாஹ்வின் தூதரையும் ”வழமைக்கு புறம்பான நடத்தைகளை கொண்ட மத குழுவின் தலைவர்” – “cult leader” என்றும் வர்ணிக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது, தற்போது இந்த செயல்பாடுகளின் பின்னால் யூத சயோனிச மற்றும் வெள்ளை மேலாதிக்க சத்திகளின் கூட்டு செயல்பாடு செறிவாக இருந்தமை பற்றிய தகவல்கள் வெளியாகியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை பெரும்பான்யாக கொண்ட முதல் நகர சபை தெரிவு செய்யப்பட்டிருந்தது . அமெரிக்க மி(ச்)சிகன் (Michigan) மாநிலத்தின் பிரபல Detroit நகருக்கு அண்மையில் உள்ள Hamtramck என்ற போலந்து கத்தோலிக்கர்களின் உறைவிடமாக முன்னர் இருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த நகரின் நகர சபைக்கு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை பற்றி பெரிதாக அலட்டிக்கொண்ட அமெரிக்க மற்றும் மேற்கு ஊடகங்கள் இது அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் குடிப்பரம்பல் மாற்றத்தை எடுத்து காட்டுவதாக குறிப்பிட்டு பெரியளவில் இஸ்மாபோபியா கருத்துக்களை வெளியிட்டிருந்தமை நினைவுபடுத்ததக்கது.
அமெரிக்க ,மேற்கு நாடுகளின் பிரதான ஊடகங்களிலும் தேர்தல் முடிவு வெளியான 2015 நவம்பர் 06 ஆம் திகதி தொடக்கம் இஸ்லாம் தொடர்பில் அச்சத்தை (Islamophobia ) தூண்டும் விதமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன .குறிப்பாக CNN தொலைக்காட்சி ஹம்றம்மிக் (Hamtramck) மேயர் கரன் மஜிவ்வஸ்கியை (Karen Majewski) அழைத்து நீங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகரத்தை நிர்வகித்து வருகிறீர்கள் நீங்கள் பயப்படுகிறீர்களா ? (“You govern a majority-Muslim-American city. Are you afraid?” ) என அதன் முதல்வரிடம் கேள்வி கேட்டு இஸ்லாமிய அச்சத்தை தூண்டிவிடும் தனது கடமையை CNN செய் திருந்தது இதே மாதிரியான அல்லது இதைவிடவும் பல மடங்கு நடவடிக்கைகளைத்தான் இப்போது அந்த ஊடகங்கள் செய்துவருகின்றன.
ஆனால் டிரம்பின் வெற்றியின் பின்னர் வெள்ளைமேலாதிக்கவாதம் அமெரிக்காவின் மையநீரோட்ட அரசியலுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்து விட்டபின்னர் ஏற்றப்பட்டுள்ள பல்வேறு சவால்களுக்கு பதிலடிகொடுக்கும் சரியான ஆயுதமாக அமெரிக்க முஸ்லிம் இந்த தேர்தல்களை பார்க்கின்றனர் , எமது முயற்சி சரியான திசையில் நகருமாக இருந்தால் அமெரிக்காவில் முதல் முஸ்லிம் ஆளுநர் ஒருவரும் அதிக எண்ணிக்கையான பல்வேறு நிர்வாக அலகுகளுக்கான உறுப்பினர்களும் தெரிவாவர் இது அமெரிக்க முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை விஞ்ஞான பூர்வமாக எதிர்கொள்ள வாய்ப்பை ஏற்றப்படுத்தித்தரும் என அவர்கள் நம்புகிறார்கள் - சவால்கள் வெற்றிகொள்ளப்படுமா அல்லது இஸ்லாத்தின் எதிரிகள் புதிய திட்டங்களுடன் உருவாகிவரும் புதிய சூழலை எதிர்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
-எஸ்.எம்.மஸாஹிம்
No comments:
Post a Comment