கனடா பல்கலைக்கழகம் ஒன்றில் தான் பேராசிரியராகப் பணியாற்றுவதாகவும் கனடா செல்ல உதவுவதாகவும் கூறி சுமார் 152 பேரிடம் 8 கோடி ரூபா ஏமாற்றிப் பெற்ற பௌத்த பிக்கு ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
அகுங்கல விகாரையொன்றில் தங்கியிருந்துள்ள குறித்த நபர், அகுங்கல, பண்டாரவளை, கண்டி, வெல்லவாய, பதுளை, வெலிகம, பல்லேகெல போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களை இவ்வாறு ஏமாற்றியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிக்குவின் சாரதியாகப் பணியாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பிக்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment