மேல் மாகாண சபையின் புதிய கட்டிடத்துக்கு தலா 650,000 ரூபா செலவில் 104 'நாற்காலிகள்' இறக்குமதி செய்யப்படவுள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இயங்கி வரும் நிலையில் நாளாந்தம் தொழிற்சங்க நடவடிக்கைகளினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேல் மாகாண சபையின் செயற்பாடுகளை ஓரிடத்துக்கும் நகர்த்தும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு பெருந்தொகைப் பணத்தில் நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து ஜே.வி.பி உறுப்பினர் ஆளுனருக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் உடனடியாக இவ்விரயத்தை தடுத்து நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment