கிளிநொச்சி - இரணமடு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் இராணுவ ட்ரக் மோதியதில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான 51 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பின்னணியில் இராணுவ ட்ரக் சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் கூடிய பிரதேச மக்கள் கோபத்தில் சாரதியைத் தாக்க முனைந்திருந்த நிலையில் அங்கு சிறு பதற்றம் நிலவியதாகவும் பொலிசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment