2018ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மாத்திரம் இலங்கையில் மொத்தமாக 282 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்!
இதில் ஆகக்குறைந்தது 28, துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய கொலைகள் எனவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
பாதாள உலக நடவடிக்கைகள் மேலோங்கியுள்ள அதேவேளை, துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களும் சகஜமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இக்கால கட்டத்தில் 1779 திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment