இலங்கையில் எதிர்வரும் 22ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுமாறு அறிவித்துள்ளது பிறைக்குழு.
புனித துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்;று (12) கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அதன் ஏற்பாட்டில் பிறைக்குழுவின் பிரதித் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.ரிழா தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் தலைப் பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைத்தமையை பிறைக்குழு உறுதிப்படுத்தியன் பிரகாரம் துல்-கஃதாவை இன்றுடன் 29ஆக பூர்த்தி செய்து இன்றிரவுவிலிருந்து துல்-ஹஜ் முதல் ஆரம்பமாவதாகவும் இந்த வகையில் எதிர் வரும் 22ஆம் புதன் கிழமை புனித ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கைவாழ் முஸ்லிம்களைக் கொண்டாடுமாறு பிறைக்குழு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
இம் மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள், பிறைக்குழு அங்கத்தவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிருவாகிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்கப் பிரதிநிதிகள், உலமாக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment