மேல்மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு 182 மில்லியன் நிதியுதவி - sonakar.com

Post Top Ad

Thursday, 9 August 2018

மேல்மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு 182 மில்லியன் நிதியுதவி


முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசனின் ஆலோசனையின் பேரில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினரும் கலாநிதி என்.குமரகுருபரன், பிரதி பொதுச் செயலாளர் எம்.பிருதிவிராஜ் ஆகியோர் மேல்மாகாண தமிழ் பாடசாலைகளின் கட்டிட வளர்ச்சி சம்பந்தமாக மேல்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார உடனான மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், தொடர்ந்து அமைச்சின் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், தமிழ் பிரிவு உதவிப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார் ஆகியோருடனான 09ம் திகதி காலை ஆளுநர் பணிமனையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் ஆளுநர் ஒதுக்கீட்டுத் தொகைக்கான அனுமதியை வழங்கி கையொப்பமிட்டார் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்,

கொழும்பு கலைமகள் தமிழ் வித்தியாலயம், புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம், புவக்பிட்டிய சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயம், களுத்துறை கீகியனகந்த தமிழ் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளுக்கான புதிய கட்டிடங்கள் 182 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் எதிர்வரும் ஒரு வருடத்திற்குள் நிறுவித் தருவதாக ஆளுநர் எம்;மிடம் உறுதியளித்துள்ளார். தனது எதிர்வரும் ஒரு வருடம் ஐந்து மாதம் பதவி காலத்தினுள் இப்பணியை நிறைவு செய்தாக வேண்டும் என்று அதிகாரிகளிடம் பணித்துள்ளார். அதன் அடிப்படையில் இப்பாடசாலைகளுக்கான கட்டிட வேலைத்திட்டங்களுக்கான வேலைத்திட்டங்கள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 


எது எப்படி இருப்பினும் எமது கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கான அபிவிருத்திகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். மக்கள் பிரதிநிதிகள் செய்யக்கூடிய கடமைகளை அவர்கள் செய்ய தவறினாலும் கூட நாம் அதனை தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். அரசியல் ரீதியான முரண்பாடுகள் எமக்குள் நிலவினாலும் கூட எமது மக்களின் தமிழ் கல்வியை முன்னெடுப்பதில் ஏனைய சமூகத்தினரைப் போன்று நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இதுவே எமது எதிர்ப்பார்ப்பாகும். இதே போல் கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் ஏனைய பாடசாலைகளின் அபிவிருத்திகளையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். இவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு எமது அதிகாரத்திற்குற்பட்ட வகையில் முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-KG

No comments:

Post a Comment