சைபீரியாவில் எண்ணை நிலையம் ஒன்றிற்கு பணியாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ரஷ்ய MI-8 ரக உலங்கு வானூர்தியொன்று வீழ்ந்ததில் 15 பயணிகள், விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 10.20 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு வானூர்திகள் பயணித்திருந்த நிலையில் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும் மற்றையது பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாகவும் ரஷ்ய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment