கேரளா வெள்ள அனர்த்தம்: இதுவரை 164 பேர் பலி! - sonakar.com

Post Top Ad

Friday, 17 August 2018

கேரளா வெள்ள அனர்த்தம்: இதுவரை 164 பேர் பலி!



தென் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் பருவமழையினால் உருவாகியிருக்கும் வெள்ள அனர்த்தத்தால் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 164 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கேரள வரலாற்றில் இவ்வாறான பாரிய இயற்கை அனர்த்தம் இடம்பெற்றிருப்பது இதுவே முதற்தடவையென அம்மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெள்ள மீட்பு பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment