ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிரித்தன் பின்னணியில் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணையப் போவதாக தெரிவித்து வந்த சு.க உறுப்பினர்களுள் நால்வர் மீண்டும் சு.க மத்திய குழுவில் இணைந்து கொண்டுள்ளனர்.
குரூப் 16ல் முன்னின்று இயங்கிய எஸ்.பி. திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால ஆகிய நால்வரே மீண்டும் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.
மஹிந்த தாம் இரு கரங்களை விரித்து வரவேற்கக் காத்திருப்பதாக தெரிவித்த போதிலும் கூட்டு எதிர்க்கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ள குறித்த குழுவினர் தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது இம்மீள் இணைவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment