உலகின் வாழ்வுக்கு 'உகந்த' நகரங்கள்: கொழும்புக்கு 130வது இடம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 August 2018

உலகின் வாழ்வுக்கு 'உகந்த' நகரங்கள்: கொழும்புக்கு 130வது இடம்!


உலகின் வாழ்வுக்கு உகந்த நகரங்கள் தரப்படுத்தலில் இம்முறை 130 வது இடத்தைப் பெற்றுள்ளது இலங்கையின் தலை நகரம் கொழும்பு.



எகனமிஸ்ட் சஞ்சிகையினால் வெளியிடப்படும் இத்தரப்படுத்தலில் 140 நாடுகளில் கொழும்ப 130வது இடத்தைப் பெற்றுள்ள அதேவேளை அவுஸ்திரியாவின் வியன்னா இம்முறை மெல்பர்னை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பங்களதேஷ' தலை நகர் டாக்காவுக்கு 139வது இடமும், சிரியாவின் டமஸ்கசுக்கு 140வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம், குற்றம், உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு விபரங்களின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடததக்கது.

No comments:

Post a Comment