டுபாயிலிருந்து 20 கிலோ கிராம் தங்கத்துடன் இலங்கை விமான நிலையம் வந்தடைந்த இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
35 வயதான குறித்த நபர் இன்று காலை கட்டுநாயக்க வந்தடைந்த நிலையில் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 13 கோடி ரூபா தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்க இறக்குமதிக்கான வரி அதிகரிப்பின் பின் இலங்கையில் தங்கக் கடத்தல் அதிகரித்து விட்டதாக அண்மையில் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment