UK: ட்ரம்ப் போகும் இடமெல்லா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் - sonakar.com

Post Top Ad

Saturday, 14 July 2018

UK: ட்ரம்ப் போகும் இடமெல்லா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்


ஐக்கிய இராச்சியம் விஜயம் செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இதுவரை வேறு எந்த நாட்டுத் தலைவரும் எதிர்கொள்ளாத அளவு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை சந்தித்து வருகிறார்.


லண்டன் உட்பட பிரதான நகரங்களில் ட்ரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் சுலோகங்களும் ஊடகங்களின் அவதானத்தைப் பெற்றுள்ள அதேவேளை ஸ்கொட்லாந்தில் கொல்ப் விளையாடச் சென்ற ட்ரம்ப் அங்கும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சஞ்சலமடைய நேரிட்டுள்ளது.


இந்நிலையில், ஸ்னைப்பர் வீரர்கள் உயர்ந்த இடங்களில் விளையாடச் சென்ற இடத்திலும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ட்ரம்ப் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment