ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்துடன் இணைந்து ஐக்கிய இராச்சிய கல்ஹின்னை நலன்புரி சங்கம் கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் ஹஜ்ஜாஜிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியும் ஹஜ் சம்பந்தப்பட்ட விளக்கவுரைகளும் வரவேற்பும் எதிர் வரும் 22ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2018 ஆண்டு பிற் பகல் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இன்சா அல்லாஹ் இந் நிகழ்ச்சியில் ஹஜ், உம்ரா, மக்கா, மதீனா ஆகியவற்றின் சிறப்புகள் பற்றியும் ஹஜ்ஜின் முக்கியத்துவம்; பற்றியும் மக்களுக்கு ஹஜ் செய்வதற்கு உற்சாகப்படுத்தும் விசேட உரையை அஷ் செய்க் மும்தாஸுல் ஹக் நிகழ்த்தவிருக்கிறார்.
அத்துடன் ஹஜ் வழிகாட்டலில் சுமார் நான்கு தசாப்த்த கால அனுபவசாலியான அல்ஹாஜ் அமானுல்லா கமால்தீன் ஹஜ் செய்யும் முறை பற்றியும் ஹஜ்ஜின் நடை முறைகள் அனுபவங்கள் பற்றியும் விரிவாக ஹாஜிகளுக்கு விளக்கமளிக்கவிருக்கிறார்.
இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற இருக்கும் ஹாஜிகளுக்கும் எதிர்வரும் வருடங்களில் ஹஜ் செய்ய இருப்பவர்களுக்கும் மிகவும் பிரயோசனமுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஹாஜிமார்களை ஒரே மேடையில் சந்தித்து ஸலாம் கொடுத்து வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-AKM
No comments:
Post a Comment