ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிக் கொள்வதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை செயற்படுத்தும் திட்டம் தொய்வு நிலையை எட்டியுள்ளது.
பிரெக்சிட் திட்டத்தின் செயலாளர் டேவிட் டேவிஸ் இன்று இராஜினாமா செய்ததையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் இன்று மாலை இராஜினாமா செய்துள்ளதுடன் பிரெக்சிட் கனவை பிரதமர் சிதைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனுக்கு பாரிய விட்டுக் கொடுப்புகளைச் செய்துள்ளதன் மூலம் பிரித்தானிய மக்களின் அபிலாசைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதாக ஜோன்சன் தெரிவிக்கிறார். இதேவேளை தாம் மக்களுக்கு நன்மை தரும் வகையிலேயே திட்டங்களை வகுத்து செயற்படுவதாக பிரதமர் தெரேசா மே தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment