ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே தாம் தொடர்ந்தும் அங்கம் வகிக்கின்ற அதேவேளை, அங்கிருந்து கொண்டே கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைய ஆதரித்ததன் பின்னணியில் குரூப் 16 உறுப்பினர்கள் அரசை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தனர். எனினும் எதிர்பார்த்தபடி கூட்டு எதிர்க்கட்சியுடன் முழுமையாக இணைய மறுத்து இரு பக்கமும் கால் வைத்திருக்கும் நிலையில் ஒரு சிலர் தொடர்கின்றனர்.
இந்நிலையில், தயாசிறி ஜயசேகர மீண்டும் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அரசியல் மட்டத்தில் ஊகம் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment