மஹிந்த அரசின் அனுசரணையில் இரு தடவைகள் இலங்கைக்கு சொகுசு விடுமுறையில் வந்திருந்த போதிலும் அது குறித்த தகவல்களை முறையாக வெளியிடாதிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி 30 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
யுத்தத்தை நிறுத்தும் படி பிரித்தானியாவிடமிருந்து வந்த அழுத்தத்தை எதிர்கொண்ட நிலையில் அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பனர்களை நேரடியாக அழைத்து நிலவரத்தை விளக்கும் நோக்கிலேயே தாம் பெய்ஸ்லிக்கு இவ்வாறான வசதி செய்து கொடுத்ததாக மஹிந்த தரப்பு தெரிவிக்கிறது.
எனினும், இரு தடவைகள் இவ்வாறு உல்லாச விடுமுறைகளை அனுபவித்த குறித்த நபர் அது குறித்த விபரங்களை நாடாளுமன்றுக்கு தெரிவிக்காததன் பின்னணியில் அங்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் அண்மையிலேயே இது குறித்த தகவல்கள் வெளியாகி சர்ச்சை உருவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment