எரிபொருள் விலையேற்றம் போன்று தனியார் மற்றும் பொது சேவை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கான பொறிமுறையொன்றை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறது ஜே.வி.பி.
எந்த அடிப்படையில் எரிபொருள் விலை உயர்வு இடம்பெறுகிறது என்பது தொடர்பில் அரசு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் மக்களுக்கு போதிய தகவல்கள் வழங்கப்படவில்லையெனவும் ஜே.வி.பி செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயராத நிலையில் இலங்கையில் மாத்திரம் ஏன் விலை உயர்த்தப்பட்டது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment