புதிய அரசியலமைப்புக்கான திட்ட வரைபு தொடர்பில் அரசியலமைப்பு குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இணக்கப்பாடில்லையெனவும் நாட்டிலேயே இருக்காத ஒருவரின் கையொப்பம் போலியாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.
10 பேர் கொண்ட குழுவில் ஆறு பேரே கையொப்பமிட்டுள்ளமையானது அரசியலமைப்பு குழுவில் கருத்து முரண்பாடு நிலவுவதை எடுத்தியம்புவதாகவும் அதிலும் ஆவண தயாரிப்பின் போது நாட்டில் இருக்காத ஒருவரது கையொப்பம் போலியாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் சபாநாயகர் கட்சித் தலைவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment