G.C.E. A/L: ரியுசன் வகுப்புகளுக்கு நாளை முதல் தடை! - sonakar.com

Post Top Ad

Monday, 30 July 2018

G.C.E. A/L: ரியுசன் வகுப்புகளுக்கு நாளை முதல் தடை!


க.பொ.த உயர் தர பரீட்சை நெருங்குகின்ற நிலையில் இன்றிரவோடு பிரத்யேக வகுப்புகள், கருத்தரங்கு, பயிற்சி வகுப்பறைகள் நடாத்தத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பரீட்சைத் திணைக்களத்தில் உள்ளவர்களின் உதவியுடன் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

இந்நிலையில், இம்முறை பரீட்சைத் தளங்களில் தொலைபேசி அலைவரிசை மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் சமிக்ஞைகளைத் தடுக்கும் தொழிநுட்படும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment