தொடர் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் கட்சி முன்னணி வகிக்கிறது.
நீண்ட போராட்டத்தின் பின் இம்ரான் கான் இம்முறை அதிகாரத்தைக் கைப்பற்றி பாகிஸ்தானின் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பலத்த வன்முறைச் சம்பவங்கள், குண்டு வெடிப்புகள், உயிரிழப்புகளுடன் தேர்தல் நடைபெற்றுள்ளது.
50 வீதத்துக்கு அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் இம்ரான் கானின் கட்சி முன்னணியில் திகழ்கின்ற அதேவேளை தனது கட்சியைக் காப்பாற்ற லண்டனிலிருந்து திரும்பிய நவாஸ் ஷரீப் சிறைவாசம் அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment