கிரான்ட்பாஸ் சீனி பபாவுக்கு மரண தண்டனை! - sonakar.com

Post Top Ad

Monday, 30 July 2018

கிரான்ட்பாஸ் சீனி பபாவுக்கு மரண தண்டனை!


போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கிரான்ட்பாஸ் சீனி பபா என அறியப்படும் உனகிலிய பிரசன்ன மற்றும் உக்கும் பிரசன்ன ஆகிய இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.


குறித்த நபர்கள் 2.8 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனை கைதிகள் பலர் இருக்கின்ற போதிலும் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் தொடர் இழுபறி நிலவுகின்றமையும் ஜனாதிபதி மைத்ரிபால தடைகளை மீறி அதனை அமுல்படுத்தப் போவதாக தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment