தமது செல்லப் பிராணியை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்காத சுங்க அதிகாரிகளை குவைத் தம்பதியர் தாக்கிய சம்பவம் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை சட்டவிதிகளுக்கேற்ப குறித்த செல்லப் பிராணி (நாய்) கொண்டு வரப்படவில்லையென்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், கோபமடைந்த தம்பதியினர் தாக்கி, பிரதிப் பணிப்பாளர் , பெண் ஊழியர் உட்பட சுங்க அதிகாரிகள் ஐவரைத் தாக்கிய நிலையில் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment