
பாண் தவிர ஏனைய பேக்கரி தயாரிப்புகளின் விலை 15ம் திகதி நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுத்திருப்பதாகவும் பாண் விலையை உயர்த்துவது தற்காலிகமாக பின் போடப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
இதேவேளை, அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி பாண் விலையை உயர்த்தாதிருக்க முயற்சிப்பதாகவும் எனினும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் விலையுயர்வு தவிர்க்க முடியாததாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment