திருகோணமலைஃ. மத்திய வீதியில்இ மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் இயங்கி வந்த முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான ஆடை விற்பனை நிலையம் ஒன்று நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது.
கடையை மூடிவிட்டு உரிமையாளர் ராசிக் மற்றும் ஊழியர்கள் வீடு செல்லும் வழியில் இச்சம்பவம் பற்றி கேள்வியுற்றுள்ளதுடன் மின் ஒழுக்கே தீ விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கின்றனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த அதேவேளை பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
-கரீம். எ. மிஸ்காத்
No comments:
Post a Comment