
யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் வாள் வெட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு தமிழ் படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைக் காட்சிகளே காரணம் என தெரிவிக்கிறார் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.
ஆவா குழுவில் இணைந்து இயங்கும் இளைஞர்களும் இவ்வாறே தமிழ் படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைச் சம்பவங்களைத் தழுவி வாள் வெட்டு, குழு மோதல்களில் ஈடுபடுவதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்..
இதேவேளை, யாழில் இடம்பெறும் சம்பவங்கள் ஊடகங்கள் மூலமாக ஊதிப் பெருப்பிக்கப்படுவதாகவும் அங்கு நிலைமை அவ்வளவு மோசமாக இல்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment