ஜனாதிபதி ஆலோசகர் எனும் பதவி தனக்குத் தரப்பட்டிருந்த போதிலும் இதுவரையிலும் எதுவித ஆலோசனையும் பெறப்பட்டதில்லையென்பதால் இனியும் தான் அப்பதவியில் தொடரப் போவதில்லையென தெரிவிக்கிறார் அத்துராலியே ரத்ன தேரர்.
ஜாதிக ஹெல உறுமய சார்பில் பொது வேட்பாளர் மைத்ரிபாலவின் வெற்றிக்காக உழைத்த ரத்ன தேரருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், கட்சியுடன் முரண்பட்டு தனித்தியங்கி வரும் அவர், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தன்னை நியாயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment