மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பாலிசேனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அலோசியஸ் அடைக்கப்பட்டிருக் சிறைக்கூடத்தில் கைத்தொலைபேசி உபயோகப்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது தொடர்பில் இன்று நீதிமன்றில் விளக்கமளித்த பொலிசார் அது பாதாள உலக கோஷ்டியினரால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர்களின் விளக்கமறியல் ஓகஸ்ட் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment