மன்னாரை டுபாயாக மாற்றப் போகும் சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 July 2018

மன்னாரை டுபாயாக மாற்றப் போகும் சம்பிக்க!


கிழக்கில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது ஊர்களை மத்திய கிழக்கு நாடுகளாக மாற்றப் போவதாக அவ்வப்போது மேடைகளில் அறிவித்து வருவதைப் பின்பற்றி மன்னாரை டுபாயாக மாற்றப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.


கூட்டாட்சியில் எண்ணற்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியின் மன்னாரில் 180 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பேருந்து மையத்திற்கான ஆரம்ப நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர் காலத்தில் மன்னனார் கேந்திர மற்றும் வணிக முக்கியத்துவம் உள்ள இடமாக இருந்ததாகவம் மீண்டும் முறையான அபிவிருத்தி மூலம் உச்ச வளர்ச்சியை அடையலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment