பெற்றோல் விலை தொடர்பில் மக்களைத் தவறாக வழி நடாத்தும் வகையில் நிதியமைச்சினால் பிரசுரிக்கப்பட்டுள்ள பத்திரிகை விளம்பரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் கூட்டு எதிர்க்கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பந்துல குணவர்தன.
மஹிந்த அரசின் போது பெற்றோல் பெரல் ஒன்றின் விலை 60 அமெரிக்க டொலராக இருந்த போதிலும் இலங்கையில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 157 ரூபாவாக இருந்ததாக குறித்த விளம்பரம் தெரிவிக்கிறது.
எனினும், அது வேண்டுமென்றே மஹிந்த மீதான சேறு பூசும் செயல் எனவும் தவறான தகவல் எனவும் தெரிவிக்கின்ற கூட்டு எதிர்க்கட்சி அப்போது பெரல் விலை 104 டொலர் எனவும் பெற்றோல் 150 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறி, இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment