பொலிசாரினால் தேடப்படும் பாதாள உலக பேர்வழிகளை சரத் பொன்சேகா தனது பிரத்யேக மெய்ப்பாதுகாவலர்களாக வைத்துப் பாதுகாப்பதாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
சிங்கள வானொலியொன்றூடாக வெளியான இத்தகவல் பொய்யானது எனவும் அரசியல் காரணத்திற்காகத் தனக்கெதிராகப் புனையப்பட்டது எனவும் அவர் தெரிவிக்கிறார். அத்துடன் தனது பாதுகாப்புக்கு பொலிஸ், விசேட அதிரிடிப்படையினரும் இரு வாகனங்களும் இருப்பதாகவும் அவற்றை யார் வேண்டுமானாலும் நேரில் காணலாம் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஒரு சில பாதாள உலக பேர்வழிகள் சரத் பொன்சேகாவுடன் காணப்படும் நிழற்படங்களும் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment