ஈரானில் பெண்கள் கட்டாயம் தலைப்பகுதியை மறைக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும் எனும் இறுக்கமான நடைமுறைக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் பொது இடத்தில் தனது ஹிஜாபை கழற்றி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணுக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இவ்வாறு ஹிஜாப் எதிர்ப்பில் ஈடுபட்ட 29 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தனக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக டிசம்பர் மாதம் கைதான Shaparak Shajarizadeh எனும் பெண் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment