போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2009 யுத்த நிறைவின் பின் இலங்கை போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த ஒரு வாரத்துக்குள் பாரிய தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மரண தண்டனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும், ஏலவே இலங்கையின் 60 வீத போதைப் பொருள் வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததாகக் கூறப்படும் வெலே சுதா மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளமையும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்தும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு கைதானமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment