பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிரியர்கள் இருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 July 2018

பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிரியர்கள் இருவர் கைது!


மொனராகல பிரதேச பாடசாலையொன்றில் உயர்தரம் கற்று வரும் மாணவி ஒருவரை பாடசாலையில் வரலாற்று ஆசிரியரும் அதே தொழில் புரியும் அவரது நண்பர் ஒருவரும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னணியில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.



மனைவியை பொலன்நறுவ அனுப்பிவிட்டு மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்ற முதல் நபர் அங்கு அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதேவேளை தனது நண்பரையும் அழைத்து அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் பின் அதனை தனது மொபைலில் ஒளிப்பதிவு செய்து முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இருவரும் இவ்வாறு பல மாணவியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்திருப்பதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment