சைப்ரஸ், மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுள்குள் கட்டாயப்படுத்தி தள்ளிவிடப்படுவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் ரோஹிங்ய மற்றும் இலங்கை தமிழ் அகதிகள் இவ்வாறான சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதாகவும் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக அழைத்துச் செல்லப்படும் பெண்கள் ஆப்கனிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலும் இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமது அனுசாரணையாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக வெளியேறும் இலங்கைப் பணிப்பெண்கள், ஜோர்தானிலும் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழ்நிலை காணப்படுவதாக 2018ம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment