தனது ஆட்சிக்காலத்தின் போது தன்னால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கான தூதர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
2020 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எதிர்பார்ப்பில் அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபட்டுள்ள மஹிந்த தன்னால் நியமிக்கப்பட்ட தூதர்களை சந்தித்து, வெளியுறவுக் கொள்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
பெரும்பாலும் மஹிந்தவால் நியமிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மஹிந்தவின் உறவினரும் முன்னாள் ரஷ்யாவுக்கான தூதருமான உதயங்க வீரதுங்க மிக் விமான கொள்வனவு மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment