மாகாண சபைகள்; புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Sunday, 15 July 2018

மாகாண சபைகள்; புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ஹக்கீம்



மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது பல குளறுபடிகளை கொண்டது. முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கக்கூடியது. 

எனவே பழைய முறையில் மாகாண சபைத்தேர்தலை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 



கட்டுகஸ்தொட்டையில் அமைக்கப்பட்டுள்ள கண்டி மாவட்டத்திற்கான அமைச்சரின்  ஒருங்கிணைப்பு அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை (13) அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பிரதித்தலைவர் எம்.எச்.எம்.சல்மான், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லாஹ்,தேசிய ஒற்றுமை முன்னணியின் செயலாளர் மஹியலால் சில்வா  மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இங்கு உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

-நாச்சியாதீவு பர்வீன்

No comments:

Post a Comment