பாதாள உலக பேர்வழிகளை மெய்ப்பாதுகாவலர்களாக வைத்துக் காப்பாற்றி வருவதாக சரத் பொன்சேகா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நல்ல வேளையாக அவரிடம் சட்ட - ஒழுங்கு அமைச்சு கையளிக்கப்படவில்லையென தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
தன்னோடு பழகிய சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் மீது 10 முதல் 20 வருடங்களுக்கு முன் இருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த நபர்களைப் பாதாள உலகத்தினர் என கதை சோடிக்கப்படுவதாகவும் தாம் அவ்வாறு யாரையும் காப்பாற்றவில்லையெனவும் சரத் பொன்சேகா மறுதலித்துள்ளார்.
எனினும், சரத் பொன்சேகாவின் தயவிலேயே குறித்த நபர்கள் பாதுகாப்பாக இருந்து வருவதாக தொடர்ந்தும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment