ஐக்கிய இராச்சியத்துக்கு முதற்தடவையாக விஜயம் செய்துள்ள சர்ச்சைக்குரிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினை எதிர்த்து தலை நகரில் இராட்சத பலூன் ஒன்று பறக்கவிடப்படவுள்ளது.
இன்று மதியம் (உள்ளூர் நேரம்) ஸ்டன்ஸ்டட் விமான நிலையம் சென்றடைந்துள்ள ட்ரம்பின் குதர்க்க பேச்சுக்கள், நடவடிக்கைகளைக் கண்டித்து லண்டன் வானில் 19.7 அடி உயரமான ட்ரம்பை சிறு குழந்தையாக சித்தரிக்கும் பலூன் பறக்கிவிடப்படவுள்ளது.
இதற்கான அனுமதியையும் லண்டன் மாநகர சபை வழங்கியுள்ள நிலையில் ட்ரம்பை அவமானப்படுத்துவது முறையில்லையெனவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும், தன்னார்வ தொண்டர்கள் பொது மக்களிடம் நிதி சேகரித்து இவ்வாறு ஒரு அவமானச் சின்னத்தை பறக்கவிடவுள்ளனர்.
கையில் ஸ்மார்ட் போன்று, சிறு குழந்தைகளுக்கான நப்பி மற்றும் நெஞ்சில் உரோமத்துடன் ட்ரம்பின் முக ஜாடையில் குறித்த பலூன் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment