பிரித்தானிய ரக்பி வீரர்கள் மரணம்: போதைப் பொருள் விற்றவர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 July 2018

பிரித்தானிய ரக்பி வீரர்கள் மரணம்: போதைப் பொருள் விற்றவர் கைது!


இலங்கை வந்திருந்த நிலையில் கடந்த மே மாதம் இரு பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்கள் மரணித்திருந்ததன் பின்னணியில் அவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்று வந்திருந்த நிலையில் மூச்சுத் திணறலில் குறித்த நபர்கள் மரணித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த விளையாட்டு வீரர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் விற்றவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment