ஹஜ் ஊழல் குற்றச்சாட்டு: திங்களன்று ஜனாதிபதி செயலகத்தில் விசாரணை! - sonakar.com

Post Top Ad

Saturday, 7 July 2018

ஹஜ் ஊழல் குற்றச்சாட்டு: திங்களன்று ஜனாதிபதி செயலகத்தில் விசாரணை!


ஹஜ் குழுவினர் பாரபட்சமாக நடந்து கொள்வதுடன் ஊழலில் ஈடுபடுவதாக அண்மையில் ஹஜ் முகவர் சங்கம் ஒன்று தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் எதிர்வரும் திங்களன்று ஜனாதிபதி செயலக, ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரிக்கப்படவுள்ளார்.



அண்மையில் அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம் சார்பாக என்.எம். முஹம்மத் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்த அதேவேளை குறித்த சங்கம் போலியானது என முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் நிராகரித்திருந்தார்.

அமைச்சரும் அவரது சகோதரரும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதுடன் ஏற்பாட்டு விடயங்களில் ஊழல் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment