சவுதி கூட்டணியினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கட்டார் மீண்டும் இவ்வருடமும் ஹஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தமது பிரஜைகளுக்கு சவுதி அரேபியா ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை மறுப்பதாக கட்டார் தெரிவித்து வரும் நிலையில் கட்டார் பிரஜைகளுக்கென பிரத்யேமாக உருவாக்கப்பட்ட இணையமூடான ஹஜ் விசா வழங்கும் வசதி கட்டார் அரசினால் முடக்கப்பட்டுள்ளதாக சவுதி தெரிவிக்கிறது.
இந்நிலையில், மன்னர் சல்மானின் உத்தரவுக்கமைய கட்டார் பிரஜைகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவென புதிய இணையத்தளம் ஒன்றையும் சவுதி வெளியிட்டுள்ளது. இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதோ கால்பந்து உலகக் கோப்பை போட்டி ஒளிபரப்பு தொடர்பிலும் கட்டார் - சவுதியிடையே முறுகல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment