விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் வட-கிழக்கில் உருவாக்க வேண்டும் என அண்மையில் கருத்துரைத்து சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை நினைத்தால் தனக்குப் பெருமையாக உள்ளதாக தெரிவிக்கிறார் பொதுபல சேனா பயங்கரவாதி ஞானசார.
கடந்த 70 வருடங்களாக பௌத்த மக்களை வழி நடாத்தக்கூடிய தலைவர்கள் உருவாக முடியாதுள்ள சூழ்நிலையில் விஜயகலாவுக்கு தன் இனத்தின் மீதிருக்கும் பற்றை நினைத்தால் தனக்குப் பெருமையாகவே உள்ளதென ஞானசார மேலும் விளக்கமளித்துள்ளார்.
கந்தகெட்டிய உல்பத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட நிலையிலேயே அங்கு இவ்வாறு தெரிவித்துள்ள ஞானசார, தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் பௌத்தர்களை மேலும் பலவீனப்படுத்தி, பிரித்தாள்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment