முஸ்லிம்கள் இலங்கையை ஆக்கிரமித்து விட்டார்கள், முஸ்லிம்களின் சனத் தொகை பெருகிவிட்டது, ஷரீயா ஆக்கிரமிப்பு உருவாகி விட்டது போன்ற வெறுப்பூட்டல் மூலம் பௌத்தர்களை உணர்வூட்டி, அதனைத் தடுக்க பொது பல சேனா, இராவணா பலய, சிங்ஹலே போன்ற அமைப்புகள் இயங்க அரசு அனுமதித்துள்ளது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கித் தம்மை பௌத்த காவலராக சித்தரப்பதற்கு கடந்த காலத்தில் முயற்சி செய்திருந்த கோத்தபாய ஆதரவாளர்ள் தற்போது மீண்டும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை ஹெல ஜாதிக பலமுலுவ எனும் பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகி விட்டது அதனை எதிர்கொள்ள கோத்தாவுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் எனும் பிரச்சாரத்தை கிராம மட்டங்களிலிருந்து முடுக்கி விட திட்டமிடப்பட்டுள்ளதாக நடுநிலை சிங்கள ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோத்தாவுக்கு நெருக்கமான முன்னாள் இராணுவ மேஜர் கமல் குணரத்ன, முன்னாள் விமானப்படைக் கட்டளைத் தளபதி ரொசான் குணதிலக, குணவன்ச தேரர் உட்பட முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இது தொடர்பில் இம்மாத முற்பகுதியில் கூடி ஆராய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய தன்னைத் தயாராக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment