லண்டன் செல்வதற்காக விமானத்தில் ஏறியிருந்த உடுவே தம்மாலோக தேரர் குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால் விமானத்திலிருந்து இறக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 12ம் திகதி வரை அவருக்கெதிரான பிரயாணத் தடை நீக்கப்பட்டுள்ள போதிலும் அவர் ஒரு மாதம் முன்பாகவே பயணிக்க முற்பட்டுள்ளதாகவும் அதனால் இவ்வாறு இறக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் முதலில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் விமானத்தில் தான் ஏறியதாகவும் புறப்பட ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக மீண்டும் இறங்கும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும் தேரர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment