கோத்தபாய ராஜபக்ச மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நியமிக்கப்பட்டு விட்டதாக உலவி வரும் தகவலுக்கு மறுப்பு வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
கூட்டு எதிர்க்கட்சி அல்லது பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லையென தெரிவிக்கும் அவர், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஊடக அறிக்கை போலியானது என தெரிவிக்கிறார்.
19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக இரு முறை ஏலவே ஜனாதிபதி பதவி வகித்த மஹிந்த போட்டியிட இயலாது என்பதால் கோத்தபாயவே மஹிந்த அணியின் வேட்பாளர் என நீண்ட காலமாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment