
போதைப்பொருள் வர்த்தகம், கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தை ஆதரிக்கின்ற அதேவேளை மரண தண்டனைகள் ஒரு போதும் குற்றறங்களைக் குறைக்காது என்பதே தமது நம்பிக்கையென தெரிவிக்கிறார் அமைச்சர் அஜித் பெரேரா.
இதேவேளை, நாட்டில் திருட்டு சம்பவங்களும் புள்ளி விபர அடிப்படையில் குறைந்திருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 2016ல் 3455 திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருந்த அதேவேளை 2017ல் அது 3366ஆகக் குறைந்திருப்பதாகவும் ஆதலால் 2018ல் மேலும் குறையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும், இவ்வருடம் விகாரைக்குள் புகுந்தும் திருடிக் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment