கூட்டு எதிர்க்கட்சியெனும் பெயரில் இயங்கி, நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்த மஹிந்த அணி, இனி வரும் காலங்களில் தம்மை ஒன்றிணைந்த பொதுஜன பெரமுனவென அடையாளப்படுத்த தீர்மானித்துள்ளது.
மஹிந்த அணியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது புதிய அரசியல் கட்சியாக இயங்கி வரும் நிலையில் கூட்டு எதிர்க்கட்சியெனும் அடையாளத்தைக் கைவிட நேற்றிரவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தம்மை ஒன்றிணைந்த பொதுஜன பெரமுனவாக அடையாளப்படுத்தப் போவதாக மஹிந்த அணியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment